Skip to main content

ஒஎன்ஜிசியால் கறுப்பு நிறத்தில் வரும் குடிதண்ணீர் பீதியில் பொதுமக்கள்.

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

"பளிச்சென்று இருந்த தண்ணீர் தற்போது நூறுமீட்டருக்கு அப்பால் வந்தாலே தூர்நாற்றம் அடிக்கிறது, இதற்கு காரணம் ஓஎன்ஜிசி தான்," என்று கலங்குகிறார்கள் பொதுமக்கள்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பழையபாளையம், காடுவெட்டி, கொடைக்காரமூலை, பாலக்காடு உள்ளிட்ட கிராமங்கள் அங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 2000 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். எப்போதும் பசுமை மங்காமல் இருந்த அந்தபகுதி ஓஎன்ஜிசி யால் பாலைவனமாக மாறிவருகிறது.
 

ground water turns black



கடந்த நான்கு ஆண்டுகளாக நிலத்தடி நீர் நிறம் மாறி கருப்பாக வரத்துவங்கியுள்ளது. ஊராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்பட்ட கை பம்புகளிலும், சொந்தமாக வீடுகளில் வைத்துள்ள கை பம்புகளிலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல தண்ணீர் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் நிறம் மாறி கருமையாகவும், துர்நாற்றம் வீசியபடியும் வருகிறது.

தண்ணீருக்காக  நாள்தோறும் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கருமை நிற தண்ணீரால் தொற்று நோய்பரவும் என்கிற அச்சமும் அவர்களை தற்பொது  அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்," பழைய பாளையம் கிராமத்தில் ஓ என் ஜி சி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் எடுக்க துரப்பணபணிகளை மேற்கொண்டு வருகிறனர். அதன் விளைவாக எங்கள் பகுதி நிலத்தடி நீரீன் தன்மை படிப்படியாக மாறி கடந்த சில நாள்களாக பழையபாளையம் கிராமம் முழுவதும் உள்ள பெரும்பாலான கிணறுகளிலும், அடி பம்புகளிலும் தண்ணீர் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறி வரத்துவங்கிவிட்டது. அதோடு அதிக துர்நாற்றமும் வீசியபடி வருகிறது. 

ஒருவீட்டின் கை பம்பில் தண்ணீர் அடித்தால் பத்து வீடுகளுக்கு அப்பால் உள்ளவர்களின் வீட்டில் ஊள்ளவர்களுக்கு கூட தூர்நாற்றம் வீசுகிறது, வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடியாத நிலமையில் உள்ளோம். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வாரம் ஒரு முறையே எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் அதை குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றபடி அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் எங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 5 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரை தேடி செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தண்ணீர் இல்லாமல் மாசுபட்ட தண்ணீரால் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடம் தேடி அகதிகளாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.


விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது, ஒஎன்ஜிசி எண்ணெய் துரப்பண பணியை மேற்கொண்டு வருவதால், பழையபாளையம், வேட்டங்குடி, புதுப்பட்டினம், தாண்டவன்குளம், உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி நீரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது." என்கிறார்கள்.

"நாட்டுக்கே சோறுபோட்ட டெல்டா விவசாயமும்,விவசாயிகளும் தண்ணீருக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளிய நமது அரசுகளை என்ன செய்யமுடியும், போராடினால் வழக்கு போடுவாங்க, வேறு என்ன செய்யமுடியும்,"என ஆத்திரமடைகிறார்கள் விவசாயிகள்.
 

 

சார்ந்த செய்திகள்