தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செல்லும் விமானத்தின் விமானிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கவுள்ளார். இதையொட்டி இன்று காலை 8.25 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானத்தின் மூலம் புறப்பட்டு கோயம்புத்தூர் செல்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆளுநர் ரவி, சென்னை விமான நிலையத்தில் விமானம் ஏறியதற்குப் பிறகு விமானத்தை இயக்கக்கூடிய விமானிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆளுநர் ஆர்.என். ரவி ஒன்றரை மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து பின்னர் மாற்று விமானி வந்தவுடன் இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு தற்போது கோவைக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இதனிடையே ஆளுநரின் வருகையையொட்டி கோவையில் தமிழ் அமைப்புகள் சார்பில் கருப்புக் கொட்டி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.