
இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாகும் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அரசிடம் அனுமதி கேட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிறப்பு காட்சிக்கென அரசு அனுமதித்த கட்டணத்தை மட்டுமே வாங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. சிறப்பு காட்சிகளுக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதால் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் சிறப்பு காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து பிகில் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.