Skip to main content

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 69 கோடி நன்கொடை!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

tamilnadu chief minister relief fund amount announced the government

 

“தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்றுவரை (17/05/2021) ரூபாய் 69 கோடி நன்கொடை வந்துள்ளது. இதில் இணைய வழியாக ரூபாய் 29.44 கோடியும், நேரடியாக ரூபாய் 39.56 கோடியும் வந்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ள நன்கொடையைக் கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுவரை வந்துள்ள ரூபாய் 69 கோடி நிதியில் முதற்கட்டமாக ரூபாய் 50 கோடியை ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, ரூபாய் 69 கோடியில் ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை ரயிலில் கொண்டுவரும் கண்டெய்னர்களை வாங்க ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்