Skip to main content

 குடி தண்ணீர் கொடுக்க  வக்கு இல்லை! சொத்து வரி தேவையா!  ஐ.பி.எஸ் ஆர்ப்பாட்டம்      

Published on 27/07/2018 | Edited on 27/07/2018

                                                                                                                                                                                                   

ips

                                                 

தமிழகம் முழுவதும்  எடப்பாடி  அரசு திடீரென சொத்து வரியை உயர்த்தி  இருப்பதை கண்டு  பொதுமக்களும் வியாபாரிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அரசியல் கடசி தலைவர்களான ஸ்டாலின் உள்பட  அனைத்து  எதிர் கட்சிகளும் எடப்பாடிக்கு எதிராக  குரல் கொடுத்து வந்தாலும் கூட தி.மு.க. ஒரு படி மேலே போய்  இந்த  சொத்து  வரியை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. 


       அதுபோல் திண்டுக்கல்லில் நடந்த  திமுக வின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட  உ.பி.கள்  கலந்து கொண்ட இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். 


      அதை தொடந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து  கொண்ட பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு  மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார்  பேசும் போது....
‘இந்த  திண்டுக்கல் மாநரில் உள்ள  48 வார்டுகள் மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள 306 பேரூராட்சிகளிலும் குடிக்க தண்ணீர் இல்லை  அதை கொடுக்க  வக்கில்லாத இந்த  எடப்பாடி  அரசு  சொத்து வரியை உயர்த்தி இருப்பது வெட்ககேடாக இருக்கிறது. ஏற்கனவே  தலைவர்  ஆட்சியில் தான் செயல் தலைவர் மூலமாக கழகத்தின்  துணை பொதுச் செயலாளரும், முன்னாள்  அமைச்சருமான ஐ.பி.திண்டுக்கல் நகருக்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டம்  கொண்டு  வந்தார். அந்த  தண்ணீரை  கூட பொதுமக்களுக்கு கொடுக்கவில்லை. அதற்குள் காவேரி பேஸ் இரண்டு என போட்டு 636கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் வர நிதிகளை ஒதுக்கீடு  செய்து இருக்கிறார்கள்.  இந்த பணிகளை கூட அமைச்சர்கள் உறவினர்கள் மூலம் பினாமியாக காண்ட்ராக்ட் எடுத்து  கொண்டு  தங்களை வளர்த்து வருகிறார்கள்.  அதுபோல்  உலக வங்கி மூலம்2300கோடி திட்டம் செயல்பட இருக்கிறது. இந்த பணிகளை எல்லாம் எடப்பாடி சம்மந்தியின் பினாமிகள் தான் பயனடைய போகிறார்களே தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த சொத்து வரியை ஒரு வருடத்திற்கு முன்பே 300மடங்கு  ரகசியமாக  ஏற்றி விட்டனர். அதை தான் இப்ப ஆறுநூறு மடங்காக உயர்த்தி இருக்கிறார்கள்.  அப்படி இருக்கும் போது  தற்பொழுது வாடகை வீடுகளுக்கு  வரி குறைத்து உள்ளதாக ஒரு மாயை உருவாக்கி வருகிறார்கள்.

 

கடந்த  தலைவர் ஆட்சியில்  சொத்து வரி ஏற்றப்பட்டது.  அதை கண்டு நம்ம கழக  துணை பொதுச் செயலாளரிடம் இங்குள்ள வணிக பெரும் மக்களும்,  பொதுமக்களும்  எங்களால் கூடுதல்  வரி கட்டமுடியாது  தலைவரிடம் சொல்லி எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுங்க என சொன்னதின் பேரில்  தலைவர், தளபதியிடம் பேசி அந்த  வரி உயர்வை  ரத்து  செய்ய  வைத்தார்.  அதுபோல் இங்குள்ள அமைச்சர்  சீனிவாசனுக்கு தைரியம் இருந்தால்  தனது தொகுதிமக்களுக்கு சொத்து வரியை  எடப்பாடியிடம் பேசி குறைத்து கொடுங்க பார்ப்போம் என வனத் துறை  அமைச்சருக்கு சவால் விட்டு பேசியதுடன் மட்டுமல்லாமல் இந்த  எடப்பாடி  அரசு உடனடியாக  உயர்த்திய சொத்து வரியை திரும்ப  பெற வேண்டும் என கூறினார். இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு  கட்சி பொறுப்பாளர்கள் பலரும்  கலந்து  கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்