






Published on 24/11/2020 | Edited on 24/11/2020
நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை முதல் மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று இரவு தொடர் மழை பெய்தது. இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தபடியே இருக்கிறது. மேலும் நிவர் புயல், அதி தீவிர புயலாக மாறி மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக சென்னை எண்ணூர் துறைமுகத்தில், 6ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி படகுகள் பொக்லைன் ஏந்திரத்தின் உதவியோடு படகு உரிமையாளர்கள் துறைமுகத்திலிருந்து அப்புறப்படுத்திவருகின்றனர்.