
சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் உள்ள கழிவு பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு துறையினர் துரிதமாக அணைத்தனர்.
சுந்தராபுரம்- மதுக்கரை சாலையில் கிஷன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது ஓல்டு பிளாஸ்டிக் நிறுவனம். இது கோவை ரத்தினம் பப்ளிக் பள்ளிக்கு அருகில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சேமித்து வைக்கபடுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 10:40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ சிறிது நேரத்தில் வேகமாக பரவியது. பின்னர் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் அந்த தீயை அணைக்க முற்பட்டதுடன் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வேகமாக பரவிய தீயை சுமார் இரண்டு மணி நேரத்தில் அணைத்தனர்.
இதில் எரிந்து போன கழிவு பிளாஸ்டிக்கின் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.