கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 9.1 டிஎம்சி தண்ணீரை திறக்க மறுப்பதை கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமுல்படுத்த உத்திரவிடகோரியும் வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பி.கற்பனைச்செல்வம் தலைமை வகித்தார்.
மாவட்டதலைவர் ஜி.ஆர் ரவிச்சந்திரன், மாவட்டத்துணைத்தலைவர் சதானந்தம், துணைச்செயலாளர் மூர்த்தி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மாநில துணைச்செயலாளர் சாமி. நடராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் செல்லையா, புவனை ஒன்றிய செயலாளர் காளி. கோவிந்தராஜன்,கீரை ஒன்றிய செயலாளர் சிவராமன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் செல்வம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய மாநில கர்நாடக அரசுகளை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுத்து வறட்சியில் இருந்து டெல்டாவை பாதுகாத்திடு என கோசங்களை எழுப்பினர்.