Skip to main content

குடிமராமத்து நிதியை ஆட்டைய போடும் மாவட்ட நிர்வாகம் : போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018


 

protest


விவசாயிகளை கொண்ட குழுக்களை அமைத்து அவர்களின் வழிகாட்டுதல், கோரிக்கைகளின் படியே குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது கூறினார். ஆனால் வாழக்கம் போலவே வேதாளம் முருங்கை மரம் ஏரிய கதையாக குழுக்களோ, விவசாயிகளோ இல்லாமல் குடிமராமத்துப் பணிகளை ஒப்பந்தக்காரர்களை கொண்டு செயல்படுத்தி வருகின்றனர். இதனை கண்டித்து திருவாரூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

இது குறித்து விசாரித்தபோது,  

"திருவாரூர் மாவட்டத்தில் 74 இடங்களில் குடிமராமத்து பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த ஒரு விவசாயிகளையோ, விவசாய சங்கங்களையோ சேர்க்கவில்லை, குழு அமைக்கவும் இல்லை. வழக்கம் போலவே ஒப்பந்தகார்களை கொண்டே பணிகளை துவங்க முயன்றுள்ளது மாவட்ட நிர்வாகம். அப்படி ஒப்பந்தகார்கள் மூலமாகவோ, ஆளும் கட்சியினரைக் கொண்டோ இந்தப் பணிகளை நிறைவேற்றினால், கண்காணிப்புக் குழு அலுவலர் வருகையில் அவரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். என்றனர்.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட குடிமராமத்து நிதியில் என்னன்ன பணிகள் நடந்தது என பல முறை விவசாய சங்கங்கள் கேள்வி வைத்தனர் ஓராண்டாக எந்த பதிலும் கொடுக்கவில்லை. அவர்கள் எந்த பணிகளையும் செய்யாமலேயே பணம் முழுவதும் ஆட்டையப்போட்டு விட்டனர் என்கிற பேச்சு மாவட்டம் முழுவதும் அலையாக அடித்துக் கொண்டிருந்தது. அதே நிலைமை இந்த ஆண்டும் செய்ய முடிவு செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். மேட்டூர் அணை விரைவாக நிரம்பி வரும் நிலையில் விரைவில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த வேலையும் துவங்கவில்லை. தண்ணீர் திறந்ததும் துவக்குவர்களோ என்னவோ! என புலம்புகிறார்கள் விவசாயிகள்.

 

சார்ந்த செய்திகள்