Skip to main content

இயற்கை ஆர்வலருக்கு மரியாதை செலுத்திய ’காலா’ ரசிகர்கள்

Published on 08/06/2018 | Edited on 08/06/2018

 

kala 1


 ரஜினி நடித்த காலா திரைப்படம் அரியலூர், ஜெயங்கொண்டம் நகரில் 2 திரையரங்குகளில் வெளியானது. பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படம் வெளியாகும்போது படப்பெட்டிகளுடன் ஊர்வலமாக தாரை, தப்பட்டை முழங்க வெடி, வெடித்து ஊர்வலமாக சென்று திரையரங்கிற்கு செல்வார்கள். ஆனால், அரியலூரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்களது தலைவரின் படம் வெளியானதை முன்னிட்டு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.

 

அரியலூர் மாவட்டம், கல்லூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் முதியவர் கருப்பையா. இவர் தமிழகம் முழுவதும் நடைபயணமாக சென்று தனது கையால் விதையிடப்பட்டு வளர்த்த செடிகளை காணும் இடங்களில் எல்லாம் வளர்த்து வருபவர். கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 3லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டுள்ளார். இதற்காக யாரிடமும் ஒரு பைசாகூட பெற்றுக்கொண்டதில்லை.

 

இத்தகைய பெருமை வாய்ந்த இயற்கை ஆர்வலர் கருப்பையா அவர்களை அரியலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பாகவும், அரியலூர் மகாசக்தி திரையரங்க நிர்வாகத்தின் சார்பாகவும் காலா திரைப்படம் வெளியான மகாசக்தி திரையரங்கத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்து தங்களுடன் காலா திரைப்படம் பார்ப்பதற்கு அழைத்து சென்றனர். திரைப்படம், அரசியல் என்பதனை தாண்டி இயற்கை ஆர்வலுருக்கு ரசிகர்கள் மரியாதை செலுத்திய இந்நிகழ்வினை பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.

சார்ந்த செய்திகள்