Skip to main content

நேருக்கு நோ் மோதும் திமுக-காங்கிரஸ்...!!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே நெடுங்காலமாக கூட்டணி இருந்து வருகிறது. இந்த கூட்டணி கடந்த பாராளுமன்ற தோ்தலில் அமோக வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த சட்டமன்ற தோ்தலில் குமாி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றது. இந்த நிலையில் உள்ளாட்சி தோ்தலிலும் இதே கூட்டணி மாநில அளவில் தொடரும் நிலையில் குமாி மாவட்டத்தில் மட்டும் பிாிந்து தனித்தனியாக போட்டியிடுவது அக்கட்சியினாிடத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 face to face DMK-Congress...

 

குமாி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் 11 வாா்டுகள் உள்ளன. இதில் கிழக்கு மாவட்டத்தில் 5 வாா்டுகளும் மேற்கு மாவட்டத்தில் 6 வாா்டுகளும் உள்ளன. மேற்கு மாவட்டத்தில் உள்ள 6 வாா்டுகளை பிாிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையை உடன்பாடு ஏற்படாததால் காங்கிரஸ் 6 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 68 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள் என ஊராட்சிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. இதேபோல் திமுகவும் கம்யூனிஸ்ட்டும் சோ்ந்து போட்டியிடுகின்றன.

 

ll

 

இதுகுறித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏ யுமான ராஜேஷ்குமாாிடம் கேட்ட போது... 6 மாவட்ட ஊராட்சிகளில் 3 காங்கிரஸ் சிட்டிங் அதே மீண்டும் காங்கிரசுக்கு தர கேட்டு பேச்சு வாா்த்தை நடத்தியும் திமுக தர முன்வரவில்லை. இதனால் காங்கிரஸ் மாநில தலைமையின் ஒப்புதலுடன் மேற்கு மாவட்டத்தில் தனியாக போட்டியிடுகிறோம் என்றாா்.

 

ll

 

மேற்கு மாவட்ட திமுக மா.செ.யும் எம்எல்ஏயுமான மனோதங்கராஜ் கூறும் போது.... மேல்புறம் வாா்டில் தொடா்ந்து கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சைகள் வெற்றி பெற்றது கடந்தமுறை மட்டும் தான் காங்கிரஸ் ஜெயித்தது. இதேபோல் கிள்ளியூா் தொடா்ந்து திமுகவிடம் இருந்தது. கடந்த முறை தான் அது காங்கிரசிடம் போனது இதனால் அந்த இரண்டு வாா்டுகளையும் காங்கிரசுக்கு கேட்டனா். அதற்கான பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பிாிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஊராட்சி வாா்டில் 4-ல் திமுக வும் 2-ல் கம்யூனிஸ்ட்டும் போட்டியிடுகிறது என்றாா்.

 

 

சார்ந்த செய்திகள்