Skip to main content

சாப்பிடும் அரிசிக்கு வரி போட்ட மோடி ... - ஈரோடு கணேசமூர்த்தி  ஆவேசம்

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

 


ஈரோடு பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ம.தி.மு.க. கணேசமூர்த்தி இன்று கொடுமுடி ஒன்றியத்துக்குட்பட்ட  வ.உ.சி நகர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம் காலனி, பள்ளக்காட்டூர், வேலாயுதம்பாளையம்,  சின்னியம்பாளையம்,  கருத்திபாளையம், வள்ளிபுரம், கருக்கம்பாளையம் காலனி, கைகாட்டி, நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

 

e

 

அப்போது அவர் மக்களிடம் பேசுகையில்,  ‘’நடைபெறுகிற இந்த தேர்தல் என்பது இந்தியாவின் ஒற்றுமையை குலைத்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க. மோடி ஆட்சியை  அகற்றுவதற்கு தான். அதேபோல், நீட் தேர்வை ரத்து செய்வதற்காகவும்  இந்த தேர்தல் நடக்கிறது. ஜி.எஸ்.டி., வரியால் சிறு குறு வியாபாரிகள், ஜவுளி, நெசவு  வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

e

 

நான் காங்கயம் பகுதியில் பிரச்சாரம் செய்த போது, அரிசி வியாபாரிகள் என்னிடம் பேசினார்கள்.  அதாவது, அரிசி ஆலைகளில் தயாரிக்கப்படும் அரிசியில், பிராண்ட் அரிசி வாங்கி சாப்பிட்டால் வரி செலுத்த வேண்டி உள்ளது.  சாப்பாட்டுக்கு கூட வரி செலுத்த சொல்லும் மோடி அரசை நாம் அகற்ற வேண்டும்.

 

e

 

தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தான் வங்கியில் நகைக்கடன் ரத்து செய்யப்படும், பட்டதாரிகள் கல்விக்கடன், விவசாய கடன் ரத்து செய்யப்படும், ஒரு கோடி பேருக்கு சாலைப்பணியாளர் பணி, 50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நலப்பணி வழங்கப்பட உள்ளது. வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெறச் செய்யுங்கள்’’ என கூறினார்.

 

e

 

விவசாயி விளைவித்து மக்களுக்கு கொடுக்கும் உணவான அரிசிக்கு கூட மோடி அரசு ஜி.எஸ்.டி. வரி போட்டு அந்த வரிப் பணத்தை மத்திய அரசு சுரண்டி எடுக்கிறது என்கிற தகவலை வேட்பாளர் கணேசமூர்த்தி கூறியது, பொது மக்களிடம் மோடி எதிர்ப்பு உணர்வை மேலும் அதிகரித்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்