அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சையது அலி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “அரசு அதிகாரிகள் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்வால் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் சொத்துகளை ஆக்கிரமிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். அதே சமயம் பொதுச் சொத்துகளைப் பாதுகாத்து மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை” எனத் தெரிவித்தார்.