போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வடமாநிலத்தவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் தமிழக தேர்வுத்துறையின் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தந்து வடமாநிலத்தவர்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது அம்பலமாகியிருந்தது. சுமார் 200 வடமாநிலத்தவர்கள் அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர். யுபிஎஸ்சி கொடுத்த சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ் தந்ததை அரசு தேர்வுத் துறை உறுதி செய்தது. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது போலீசில் புகார் தர அரசு தேர்வுகள் துறை பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில் 'தமிழகத்தில் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் மோசடி செய்து 300 வடமாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களின் வேலைவாய்ப்பைப் போலி சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த வடமாநிலத்தவர்களைப் பணியிலிருந்து நீக்க வேண்டும்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.