Skip to main content

அதிகாரத்தை பயன்படுத்தி பதினோரு எம்.எல்.ஏக்களை தப்பவைக்கிறார் சபாநாயகர் - பாலகிருஷ்ணன் சாடல்

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

"பதினோரு எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கை தனது செல்வாக்கை பயன்படுத்தி சபாநாயகர் தனபால் அவர்களை தப்ப வைக்க முயற்சிக்கிறார், அவர்களோடு சேர்ந்து அவரும் மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்," என்கிறார் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.

திருவாரூர் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு 100 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மருத்துவமனையில் பார்த்துவிட்டு வந்தவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

 Eleven MLAs escape using power of Speaker- cbm balakrishnan press meet


"தரமான குடிநீரை கூட தருவதற்கு இயலாத நிலையில் நமது நகராட்சி நிர்வாகமும், அரசும் செயல்பட்டு வருகிறது. நோய் வந்ததற்கு பின் தீர்வுகாண முயல்வதை விட முன்னெச்சரிக்கையாக  தடுப்பதற்கு முன்வரவேண்டும். கொரானா சோதனை செய்யும் மையத்தை மாவட்டத்துக்கு ஒன்றாக அதிகரிக்க வேண்டும்.இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தரும் தகவல்களில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. உறுதியான தகவலை தரவேண்டும்" என்றார்.

பதினோரு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டிருப்பது குறித்து பேசியவர், "இந்த வழக்கில் சம்பவ இடத்தில் இருந்த சபாநாயகர் தனபாலே இதற்கு சாட்சி, அவர் ஆதாரம் தேடாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய பதவியை பயன்படுத்தி 11 பேரை தப்பவைக்க முயற்சிக்கிறார். நாளை 11 பேருடன் சேர்த்து அவரும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்." என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்