தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டும் வந்துகொண்டிருக்கும் நிலையில் கோவாக்சின் தடுப்பூசி வரவு முற்றிலும் குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று (08.07.2021) திருச்சியில் 5,900 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் எட்டு தடுப்பூசி மையங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால அவகாசம் முடிந்து பல நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்றுவரை இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் பலர் அவதியடைந்துள்ளனர். இன்று காலை துவங்கப்பட்ட தடுப்பூசி முகாமில் காலை 6 மணிக்கெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்கள் முடிவடைந்தன. இதனால் தற்போது தடுப்பூசி முகாம் மையங்களுக்கு முதியவர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசானது முதல் தவணை காலம் முடிந்து இரண்டாவது தவணைக்காக காத்திருக்கக் கூடிய முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, கோவாக்சின் தடுப்பூசி எண்ணிக்கை அதிகளவில் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.