சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றதின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த நிலம் கையகபடுத்தும் முயற்சியில் இருந்த இந்த 8 வழி சாலை திட்டதிற்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தடைவிதிக்கப்பட்டிருந்து. நீதிமன்றத்தின் இந்த தடையை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஆனால் தற்போது தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சேலம் உத்தமசோழபுரம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாயில் கருப்புத்துணி கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.