Published on 21/02/2019 | Edited on 21/02/2019
நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரி ரூபாய் 220 கோடிக்கு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
வெளிமாநில கோழிப்பண்ணை நிறுவனங்கள் முட்டை டெண்டரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சத்துணவு முட்டை கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரிய அறிவிப்பாணையை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்துள்ளது.
புதிய டெண்டருக்கான அறிவிப்பாணையும் தமிழக அரசு வெளியிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த புதிய டெண்டருக்கான அரசாணை வெளியாகும் வரை ஏற்கனவே உள்ள ஒப்பந்தக்காரர்கள் முட்டைகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.