Skip to main content

4 கி.மீ. தூரம் நடந்து சென்று குடிதண்ணீா் எடுக்கும் குமாி எல்லை மக்களின் அவல நிலை 

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

 

d

         

கேரளா எல்லையொட்டி இருக்கும் குமாி மாவட்டம் இயற்கை வளம் கொண்ட மாவட்டமாகும். இங்கு கடும் வறட்சி நிலவினால் மட்டுமே தான் தண்ணீா் பஞ்சம் வருமே தவிர மற்றப்படி ஆண்டு முமுவதும் குளங்கள் மற்றும் கால்வாய்களில் ஒரு சொட்டு தண்ணீராவது பாய்ந்து கொண்டு தான் இருக்கும்.  
 

         இதே போல் தான் தற்போது கரை முட்டும் அளவுக்கு கால்வாயிலும் குளங்களிலும் தண்ணீா் கிடந்தாலும் அதில் ஒரு சொட்டு தண்ணீா் கூட குடிக்க முடியாத நிலைக்கு பல கிராமங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த மாற்றம் குமாியில் தாண்டவமாடிய ஓகி புயலுக்கு பிறகு தான் ஏற்பட்டுள்ளது.
 

         ஏனென்றால் குமாி மேற்கு பகுதியில் கடற்கரையையொட்டி இருக்கும் கிராமங்களில் உள்ள நிலத்தடி நீா்களில் கடல் நீா் புகுந்து விட்டதால் கிணறு மற்றும் மோட்டாா் பம்புகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீாில் உப்பு கலந்து இருக்கிறது. இதனால் பல கிராமங்களில் குடிதண்ணீருக்காக கஷ்டப்படுகின்றனா். 
 

             இதில் பொிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் கிராமம் கொல்லங்கோடு பேருராட்சிக்குட்பட்ட நீரோடி காலணி மக்கள். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். இங்கு பேருராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீா் சுகாதாரமற்ற நிலையில்  இருந்ததால் அந்த குடிநீரை பயன்படுத்தி வந்த மக்களை நோய் தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதனால் அந்த தண்ணீரையும் மக்கள் பயன்படுத்துவதை நிறுத்தினாா்கள். 
 

           இதனையடுத்து நிலத்தடி நீாில் கடல் நீா் புகுவதை தடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கும் அரசுக்கும் மக்கள் கோாிக்கை வைத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் குடிதண்ணீருக்காக கேரளா எல்லையான பொழியூா் பகுதிக்கு 4 கி.மீ தூரம் நடந்து சென்று தினமும் குடி தண்ணீா் எடுத்து வருகின்றனா். இவா்கள் அன்னை நகா் பகுதியில் உள்ள கால்வாயை கடந்து தான் பொழியூா் பகுதிக்கு செல்ல வேண்டும். 
 

             இதற்காக அந்த கால்வாயை கடந்து செல்ல அந்த மக்கள் மரத்திலான பாலம் ஓன்றை சொந்த செலவில் அமைத்துள்ளனா். அந்த பாலத்தின் வழியாக தான் தினமும் பெண்கள் இடுப்பிலும் தலையிலும் குடங்களை சுமந்து சென்று குடிதண்ணீா் எடுத்து வருகின்றனா்.
 

இந்த அவல நிலையை தினம் தினம் பாா்க்கும் மக்கள் பாிதாபபடுகிறாா்களே தவிர அதிகாாிகள் இதற்காக கொஞ்சமும் நடவடிக்கை எடுக்க வேண்டிய மனரீதியில் இல்லையென்று மக்கள் கூறுகின்றனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்