Published on 02/09/2021 | Edited on 02/09/2021

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்கத் தமிழ் நூல்களுக்குத் 'திராவிடக் களஞ்சியம்' என பெயர் மாற்றப்பட்டது மற்றும் 'வலிமை சிமெண்ட்' குறித்து விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது, "கால்டுவெல் தொடங்கி செம்மொழித் தமிழ் வரை காலகட்ட நூல்கள் மட்டுமே திராவிடக் களஞ்சியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டையும் போட்டு சிலர் குழப்பிக் கொள்ளக் கூடாது; மற்றவர்களையும் குழப்பக் கூடாது. தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம், புதிய சிமெண்ட்டை அறிமுகப்படுத்தியதால், சிமெண்ட்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. புதிய ஆலைகள் சிமெண்ட் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வலிமை சிமெண்ட் விற்பனைக்கு வரும்போது மற்ற சிமெண்ட்களின் விலை குறையும்" எனத் தெரிவித்தார்.