Skip to main content

“அடுத்து சில நாட்களுக்கு தேவையின்றி வெளியே வரக்கூடாது” - ராதாகிருஷ்ணன் பேட்டி (படங்கள்)

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

சுகாதாரத்துறை ஐ.ஏ.எஸ். ராதாகிருஷ்ணன், சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை பார்த்து சில அறிவுரைகள் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனாவின் பாதிப்பு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது.

 

அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது. மேலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்துக்கொண்டால் கரோனா முழுமையாக குறையும். முகக்கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்ற மாநிலத்தைவிட தமிழகத்தில் கரோனா குறைவாக இருப்பதாக நினைத்து மக்கள் வெளியே வரக்கூடாது” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்