கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு, பிற மாநிலங்களுக்கு செல்லும் பொழுது இ-பாஸ் வாங்கி செல்ல வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்று காலை திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், இ-பாஸ் வழங்க ஒரே ஒரு குழு இருந்த நிலையில், இ-பாஸ் பெறுவதற்கான முறையை எளிமைப்படுத்த மாவட்டந்தோறும் இரு குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது எனகூறியிருந்தார்.
இந்நிலையில் இன்னல்களை ஏற்படுத்தும் இ-பாஸ் இனி தேவையில்லை என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். செயற்கையான தடையை ஏற்படுத்தி ஊழல் முறைகேட்டுக்கு கதவை திறந்து வைக்கிறது இ-பாஸ். மக்களின் உணர்வுகளை மதித்து மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கான இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு தளர்வு மக்களுக்கு பயனளிக்கும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.