கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கீழடி 10ஆம் கட்ட அகழாய்வில் அகழாய்வுக்குழி எண் YW11/3 இல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முறையே 58 செ.மீ மற்றும் 96 செ.மீ ஆழத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்புரம் சிவப்பு வண்ணப்பூச்சு பெற்ற பளபளப்பான பானை ஓடுகளில் இம்மீன் உருவங்கள் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. பகுதி உடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ள மீன் உருவம் பொறிக்கப்பட்ட இப்பானை ஓடுகளின் நீளம் மற்றும் அகலம் முறையே 4X 5 செ.மீ மற்றும் 4 X3 செ.மீ ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ‘கடலூர் மாவட்டம், மருங்கூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வில் இராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நாணயம் 23.3 மி.மீ விட்டமும் 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது’ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.