Skip to main content

இந்தி எழுத்து அழிப்பு! கி.வீரமணி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைது! 

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று இந்தி அழிப்பு போராட்டம் நடந்தது. தேசியக் கல்வி என்ற பெயரால் ஒன்றிய அரசு திணிக்க இருக்கும் ஹிந்தியை எதிர்த்து, இன்று (30.4.2022) பிற்பகல் 3 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்படும் என்று தி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.   

 

அதன்படி இன்று திராவிட கழகம் தலைவர் கி. வீரமணி தலைமையில் பெரியார் திடலில் இருந்து பேரணியாக பூந்தமல்லி சாலை வழியாக எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை ரயில் நிலையம் அருகே வைத்து கைது செய்தனர். இதில், சுமார் 400 பேர் கைதாகினர். இந்தப் பேரணியை சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த முத்தரசன் தார் டப்பா மற்றும் பிரஸ் கொடுத்து துவக்கி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்