Skip to main content

தேசம் காப்போம் கூட்டம்! முடிந்தால் நடத்திப் பாருங்கள் எனக் கூறிய இன்ஸ்பெக்டருக்கு கூட்டத்தில் கண்டனம்!!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தேசம் காப்போம் கூட்டம் நடந்தது.

இக் கூட்டத்தை முடிந்தால் நடத்திப் பாருங்கள் என கூறிய வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டிக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வத்தலக்குண்டு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தேசம் காப்போம் பொதுகூட்டம் மதுரை சாலையில் நடந்த அனுமதி கோரப்பட்டது. போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் மதுரை சாலையில் மேடையமைத்து கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் வீரர்அப்துல்லா தலைமை வகித்தார். தேசம் காப்போம் கூட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அனைவரும் முழங்கினர். 

 

desam kappom meeting in dindigul


பிரபல எழுத்தாளர் வே.மதிமாறன் பேசும்போது, கூட்டத்திற்கு அனுமதி இல்லை என மறுத்த போலீசார் வத்தலக்குண்டில் உள்ள அனைத்து இந்து கோயிலுக்கும் ஏன் அதிக அளவில் பாதுகாப்பு வழங்கி ஒரு பதட்ட சூழ்நிலை உருவாக்கினீர்கள். இந்தக் கூட்டத்தில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தானே பங்கேற்று உள்ளோம். மேடை அமைக்க முன் வந்தவர்களிடம் கூட்டத்தை முடிந்தால் நடித்திப்பார் என வத்தலக்குண்டு காவல்துறை ஆய்வாளர் பிச்சை பாண்டி பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழக காவல்துறை மத்திய, மாநில அரசுகளின் ஏவல் துறையாக மாறி இருப்பது வருத்தத்துக்குரியது எனப் பேசினார்.

த.மு.மு.க மாநில பேச்சாளர் பழனிபாரூக் பேசும்போது, பிஜேபி கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நினைத்தால் கபரஸ்தானுக்கு (சுடுகாடு) செல்வோமே தவிர பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டோம் ஏனென்றால் இந்தியா எங்கள் நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு என்றார். 

அய்யா தர்மயுக வழிப் பேரவை தலைவர் பாலமுருகன் பேசும்போது, முஸ்லீம் எனது தாய்மாமன் உறவு. எங்கள் தொப்புள் கொடி உறவை யாரும் துண்டாட முடியாது என்றார். 

கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், பத்திர எழுத்தர் சங்கத்தலைவர் பா.சிதம்பரம், அ.ம.மு.க அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மணிகண்டன், மக்கள் நீதி மய்யம் ஒன்றிய செயலாளர் மனோதீபன், மதிமுக ஒன்றிய செயலாளர் மருதுஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் இஸ்லாமியர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தடையை மீறி கூட்டம் நடத்தப்பட்டதால், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த இப்ராஹிம், ரிஜால், ஜெய்லானி மற்றும் பலர் மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்