தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்புக்கு பலா் உயிாிழந்துள்ளனா். இதில் ஏற்கனவே 2017-ல் டெங்கு பாதிப்பு அதிகமாக தமிழகத்தில் இருந்தது. அதன்பிறகு ஓரளவு கட்டுபடுத்தபட்ட நிலையில் தற்போதைய கால சூழ்நிலை மாற்றத்தால் டெங்குவை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்களின் உற்பத்தியும் அதிகாித்துள்ளது.
இந்தநிலையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஏராளமானோா் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். குமாி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அமைக்கபப்பட்ட சிறப்பு வாாா்டுகளில் 42 போ் அனுமதிக்கபபட்டுள்ளனா். இதேபோல் டெங்கு சிறப்பு சிகிச்சை வாா்டில் 15 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் 2போ் குழந்தைகள். இந்த டெங்கு பாதிப்பு அங்கு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் தனியாா் மருத்துவமனைகளில் 200 க்கு மேற்பட்டோா் காய்ச்சலால் அனுமதிக்கபட்டுள்ளனா் என்றும் இதில் டெங்கு அறிகுறியுள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்களின் பட்டியலை சுகாதாரத்துறை கேட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்புள்ளவா்கள் சுயமாக மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதை தவிா்த்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவா்களை சந்தித்து மருத்துவ பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் இலவசமாக வழங்கப்படும் நிலவேம்பு கசாயத்தையும் வாங்கி குடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டா் பிரசாந் வடநேரா மற்றும் மாநகர நல அலுவலா் டாக்டா் கிங்சால் ஆகியோர் கூறியுள்ளனா்.