Skip to main content

காலா படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Published on 06/06/2018 | Edited on 06/06/2018
kaala


நாடார் சமுதாயம் குறித்த ஆட்சேபகரமான கருத்துக்களை நீக்கும்வரை காலா படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யபட்டது. இந்த வழக்கை 06.06.2018 புதன்கிழமை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

 

 

 

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது. மும்பையைச் சேர்ந்த திரவியம் நாடார் என்பவர் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது மகன் ஜவகர் நாடார் ஏற்கனவே ரஜினிக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
 

 

 

 இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி டி. ராஜா முன்னிலையில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்தர் ஆஜராகி காலா படத்தில் நாடார் சமுதாயத்துக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவற்றை நீக்க கோரியும், அதுவரை படத்துக்கு தடைவிதிக்க கோரியும் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். 

இதை ஏற்று கொண்ட நீதிபதி டி.ராஜா, மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் 06.06.2018 புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்