தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் தங்களுக்கு போதிய ஊதியம் கொடுப்பதில்லை என்றும் மத்திய அரசின் மருத்துவர்களுக்கு நிகரான ஊதியத்தை எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி மத்திய அரசு மருத்துவர்களின் ஊதியத்திற்கு இணையாக ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்கடர்கள் சங்கம் சார்பில் ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனையில் ஒட்டு மொத்த மருத்துவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆந்திரம், பீகாரை காட்டிலும் தமிழகத்தில் குறைந்த ஊதியமே கொடுப்பதாகவும், ஆனால் தமிழ்நாடுதான் மருத்துவத்தில் சிறந்து விளங்குவதாகவும், தாய், சேய் காத்தல், சுகாதாரம் பேனிக்காத்தல் என அனைத்திலும் முன் மாதரியாக வகிக்கிறது. இந்தநிலையில் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?
தமிழகத்தில் உள்ள மருத்துவர்களை காட்டிலும் மத்திய அரசின் மருத்துவர்கள் இரண்டு மடங்கு அதிகமாக சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. தோராயமாக சொன்னால் முதுகலைப்பட்டம் பெற்ற அரசு டாக்டர் எங்களுக்கு 53 ஆயிரம் மாதம் சம்பலம் தருகிறார்கள் என்றால். அதே பணிக்கு எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு 85 ஆயிரம் மாத ஊதியம் கொடுக்கப்படுகின்றது.
அது மட்டும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மற்ற தனியார் மருத்துமனையில் பணிபுரியாமல் இருக்க மத்திய அரசு 20 சதவீதம் கூடுதல் சம்பலம் கொடுக்க சொல்கிறது. அதையும் எங்களுக்கு தர மறுக்கிறது இந்த அரசு.
ஏற்கனவே பல ஆண்டுகளாக நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதோடு பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ள நிலையில் மேலும் எங்களால் எதையும் இழக்க முடியாது. எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றனர்.
Published on 20/08/2018 | Edited on 27/08/2018