டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் சந்தித்தனர்.
அப்போது தமிழக பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை பிரதமர் மோடியிடம் திமுக எம்.பிக்கள் நேரில் வழங்கினர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 90% இட இதுக்கீடு அளிக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு. மாநிலத்தில் ஆறுகளை இணைக்க வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை கைவிட வேண்டும். காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது, சேலம் உருக்காலை தனியார் மயமாக்கக்கூடாது, முல்லை பெரியாறு அணை உள்ளிட்ட 16 பிரச்சனைகள் குறித்து கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்துக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய ரூபாய் 7,825 கோடியை தருமாறும் பிரதமரிடம் திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.