Skip to main content

இறந்தவரின் உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்கு வழங்கிய குடும்பம்!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
dead body


தஞ்சை மாவட்டம், கும்பகோணம் புளியம்பேட்டை ராஜலெட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கும்பகோணத்தில் அச்சகம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி சரோஜா மற்றும் மூன்று மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது.

இந்தநிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன் வயது முதிர்வின் காரணமாக உடல் தலர்ந்து வீட்டில் படுத்த படுக்கையான முருகேசன் நேற்று காலை உயிரிழந்தார். "தான் இறந்துவிட்டால் எனது உடலை அடக்கம் செய்யக்கூடாது மாறாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும், எனது உடலை வருங்கால மாணவர்கள் ஆராட்சி செய்து, மக்களுக்கு பயனுள்ள மருத்துவராக வருவார்கள்", என கூறியிருந்தார்.

அதன்படி, முருகேசன் இறந்ததும் ஸ்டார் மனிதநேய சங்கமத்தின் தலைவர் எஸ்.எம்.மார்ட்டின் என்பவரிடம் தெரியப்படுத்தினர். அதன்பிறகு முருகேசனின் உடல் இன்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் முருகேசனின் மகன்கள், மருத்துவக்கல்லூரியின் மெய்யியல் துறை பேராசிரியர்களிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து எஸ்.எம்.மார்ட்டின் கூறுகையில், "கும்பகோணத்தில் கு.ரா.கிருஷ்ணமூர்த்தி எனும் எழுத்தாளர் இறந்தபோது அவரது உடல் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. அப்போது முருகேசன் உள்பட 15 பேர் உடல் தானம் வழங்குவதாக உறுதியளித்தனர். அந்த 15 பேரில் முருகேசனின் மனைவி சரோஜாவும் அடங்குவார்.

முருகேசனின் எண்ணத்தின்படி அவர் இறந்ததும், அவரது உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக வழங்கப்பட்டது". என்றார்.
 
- க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்