Skip to main content

தூக்கிட்டு கொண்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள்... காவல்துறை தீவிர விசாரணை! 

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் மனோகரன்- கலா தம்பதியினர்.  இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமாகி இருபது வருடங்களுக்கு மேலாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், நேற்று வழக்கம்போல் வீட்டில் அனைவரும் படுத்து உறங்கியுள்ளனர்.  இந்நிலையில் இன்று (22/11/2019) காலை வீட்டில் அருகே உள்ள சமையலறையில் கலா தூக்கு மாட்டிக்கொண்டு இருப்பதை கண்ட அவரது மகள் கதறி அழுதுள்ளார். இதனை பார்த்த  அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கலாவின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தனர்.  


கலாவின் உடலை பார்த்து கதறி அழுத அவரது உறவினர்கள், அவரது கழுத்து, முதுகு மற்றும் கால்களில் ரத்தத்துடன் கீறல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கலாவின் கணவர் மனோகரிடம், 'கொலை செய்துவிட்டாய்' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

cuddalore district incident women incident police invesrtigation


இந்நிலையில் கம்மாபுரம் காவல்துறையினருக்கு கலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அடக்கம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டு இருந்த கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கலாவின் கணவரான மனோகரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் அடித்து கொலை  செய்யப்பட்டாரா? தற்கொலையா? என்பது தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.


 

சார்ந்த செய்திகள்