Skip to main content

பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற கவுன்சிலர்; மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
councilor who tried to lost their life in Trichy Municipal Corporation meeting

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசர மற்றும் சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், துர்கா தேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் பேசிய 60ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், கடந்த 2 வருடங்களாக என்னுடைய வார்டில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இது தொடர்பாக பல முறை தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் பேசியும் அதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் எனது வார்டு மக்களுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. 25 வருடமாக மாமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றிக் கொடுத்த மக்களுக்கும் அமைச்சர் நேருவுக்கும் நன்றியை தெரிவித்துகொண்டு எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கண்ணீருடன் பேசிய காஜமலை விஜய் மேயர் மற்றும் ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்த் காஜாமலையை மற்ற மாமன்ற உறுப்பினர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காஜாமலை விஜய் என்னை யாரும் தடுத்தீர்கள் என்றால் காரில் இருக்கும் மண்ணெண்ணையை எடுத்து வந்து தற்கொலை செய்துகொள்வேன் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய காஜாமலை விஜய் மீண்டும் வந்து தீடீரென பெட்ரோலை தனது தலையில் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சிடைந்த காவலர்கள் காஜாமலையை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற போது அதனை ஒளிப்பதிவு செய்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை காஜாமலை விஜயின் கார் ஓட்டுநர் மற்றும் மாமன்ற உறுப்பினர் 45 வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் தாக்கியதால் அந்த பகுதி பெரிதும் பரபரப்புடன் காணப்பட்டது. திமுக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள திருச்சி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தனது வார்டில் நடைபெறவில்லை என்று மாமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.