“கும்பிடு போட்டு ஓட்டு கேட்க முதலமைச்சர் ரோட்டுக்கு வந்தாருல்ல.. அவரை இங்கே வரச்சொல்லுங்க..”-வைரலானது அந்த இளைஞர் காவல்துறையினரிடம் காட்டிய ஆவேசம்!

‘எங்கே வெளியே வந்தால் கரோனா நம்மை தொற்றிக்கொள்ளுமோ?’ என்ற பயத்தில், தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் பலரும் தனிமைப்படுத்துதலை தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் நிலையில், சாத்தூர் (அதிமுக) எம்.எல்.ஏ. ராஜவர்மன், “சாத்தூர் அறிஞர் அண்ணா காய்கனி மார்க்கெட் பகுதியில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. அதனால், பொது மக்களும், வியாபாரிகளும், காவல்துறையினரும் மிகவும் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், வழக்கமாக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் வடக்கு ரதவீதிக்கு தற்காலிகமாக மார்க்கெட்டை மாற்ற வேண்டும்.” என நகராட்சி ஆணையர், பொறியாளர் மற்றும் அண்ணா மார்க்கெட் நிர்வாகிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு நிற்கவில்லை எம்.எல்.ஏ. தானே முன்னின்று, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி கலந்த நீரை தொகுதியில் பரவலான இடங்களில் தெளிக்க வைத்துள்ளார்.
ஆளும்கட்சியோ, எதிர்க்கட்சியோ, மக்கள் நலனில் எம்.எல்.ஏ.க்கள். அக்கறை கொண்டிருந்தால் சரிதான்!