திருவாரூர் திரு.வி.க அரசு கல்லுாரியில் படித்துவரும் மாணவர் மாரிமுத்து அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், போராட்டத்தில் பேராசிரியர் ஒருவரை தாக்கி முழக்கமிட்டதாகவும் நீங்கம் செய்யப்பட்டார், விரக்தியான மாணவன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கிவருகிறது.
திருவாரூர் கங்ளாஞ்சேரியை சேர்ந்த மாணவன் மாரிமுத்து. இவர் திருவிக அரசு கல்லுாரியில் பிஏ தமிழ் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த டிசம்பர் 16ம் தேதி கல்லுாரி வளாகம் முன்பு குடிநீர், உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட மாரிமுத்து, கல்லுாரி பேராசிரியர் ஓருவர் போராட்டத்திற்கு எதிராக இருப்பதாக கூறி கூறி முழக்கமிட்டதாக, கூறி கல்லுாரி நிர்வாகம் மாணவர் மாரிமுத்துவை கல்லுாரியை விட்டு நீக்கியது.
மாணவர் மாரிமுத்து கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை மன்னிப்புக்கேட்டும், மன்னிப்பு கடிதத்தை கொடுத்தும், கல்லூரி நிர்வாகம் அவரது மன்னிப்பை ஏற்கவில்லை இதனால் விரக்தியான மாணவர் மாரிமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில் மீண்டும் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாரிமுத்துவின் விளக்கத்தையும், மன்னிப்பையும் மீண்டும் கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது. வீீட்டிலும் மாரிமுத்துவை திட்டியுள்ளனர், மனமுடைந்த மாரிமுத்து 1 ம் தேதி இரவு வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு படுத்துவிட்டார், மயக்க நிலையில் இருந்த மாணவர் மாரிமுத்து அவரது குடும்பத்தினர் திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர், அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுவதோடு, தீவிர கண்காணிப்பிலும் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருவாரூர் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.