Skip to main content

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதித்த உத்தரவு செல்லும்! 

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
hc

 

நீதிமன்ற உத்தரவு காரணமாக மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு தமிழ் துறையில், 13 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி இந்த தேர்வு நடைபெறவில்லை எனக் கூறி, முத்துகுமார் என்பவர் 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படி, 2015 டிசம்பரில் இடைக்கால உத்தரவு  பிறப்பித்தது.

 இந்த இடைக்கால் உத்தரவை நீக்க கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உதவி பேராசிரியர் பணியிடத்தை கால வரம்பின்றி நிரப்பாமல் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனக் கூறி, இடைக்கால உத்தரவை கடந்த ஜூலை மாதம் நீக்கி உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை எதிர்த்து, பிரதான வழக்கை தாக்கல் செய்த முத்துகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, கல்லூரி மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால், உதவி பேராசிரியர் இடத்தை நீண்ட காலத்திற்கு காலியாக வைத்திருக்க முடியாது என்பதால், ஒரு இடத்தை நிரப்ப விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. மனுதாரருக்கு பாதிப்பும் இல்லை எனக் கூறி, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


 

சார்ந்த செய்திகள்