Skip to main content

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் மெரினா கடற்கரை

Published on 01/04/2018 | Edited on 01/04/2018




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் சனிக்கிழமை இளைஞர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து மெரினா கடற்கரை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடற்கரை முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடற்கரைக்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. மெரினாவில் சர்வீஸ் சாலைகள் முழுவதும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன. கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையில் மட்டும் நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறது.  
 

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலை மூடப்பட்டுள்ளதால் மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. லூப் சாலையை போலீசார் மூடிவிட்டதால் மீன் விற்பனை நடைபெறவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு மீன் விற்பனை தொடங்கி விடும். ஏராளமான பொதுமக்கள் பட்டினப்பாக்கத்துக்கு வந்து மீன் வாங்கி செல்வார்கள்.  லூப் சாலை மூடப்பட்டதால் மீன் வணிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்