திருச்சியில் சமீபக்காலமாக பெண் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் காணாமல் போவதும், குழந்தைகள் கடத்தப்படுவதும், வன்கொடுமை செய்யப்படுவதுமாய் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படும் பெற்றோரை விட்டு வெளியே வரும் பெண் குழந்தைகளே பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் கடந்த ஓராண்டுகளில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகள் பலர் ஏதோ ஒரு வகையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள், இதில் ஊடகம் மூலம் வெளிவருபவை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் வெளியே வராமல் இருப்பது இன்னும் அதிகம்.
மத்திய அரசு - மாநில அரசு இரண்டும் பெண்களை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்போம் என ஒரு புறம் கூறிக்கொண்டு மாவட்டந்தோறும் பல பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகளும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நல அமைப்பு என மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சமூக நல துறை, குழந்தைகள் நல குழுமம், சைல்டுலைன் (1098), காவல்துறையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்கள் பாதுக்காப்பு பிரிவு, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசு சார்பில் குழந்தைகளுக்கான பாதுக்காக்கும் கடமையில் பணியாற்றி வருகின்றனர்.
குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தல், பாதுகாப்பற்ற நிலையில் வரும் குழந்தைகள் ஆகியோரை மீட்டு பாதுகாப்பு அளிக்கும் முக்கிய அதிகாரிகள் செயல்படுகின்றனர். மேலும் இதுப்போன்ற நிலைமைகளில் வரும் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பாதுகாப்பு நலன் கருதி அரசு ஏற்று நடத்தும் விடுதியில் தங்க வைப்பது வழக்கம், அப்படி விடுதிக்கு செல்லும் சிறுமிகளுக்கு சரியான உணவும், உடையும், மேலும் பற்பல பாதுகாப்பு வசதிகள் வழங்கவேண்டியது அவ்விடுதியின் கடமையாகும்
சமீபத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வீ.என்.நகர் இருக்கும் டி.எம்.எஸ்.எஸ்.எஸ் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விடுதியில் இருந்து சிறுமிகள் சிலர் அங்கிருந்து தொடர்ச்சியாக தப்பித்து செல்வது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நாம் விசாரிக்கையில்,
கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி திருச்சி ரயில் நிலையம் வந்தார். அவரை ரயில்நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மீட்டு விசாரிக்கையில் குடும்ப பிரச்சனையால் ஓடி வந்தாக சொல்கிறார். இந்த குழந்தை தற்காலிக விடுதி டி.எம்.எஸ்.எஸ்.எஸ் சொந்தத்தில் அதன்படி சிறுமி விடுதியில் தங்க வைக்கிறார்கள். இரண்டு நாள் இருந்து வந்த நிலையில் காப்பகத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்து 2 சிறுமிகள் தப்பியோடிவிட்டனர்.
அதில் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு சென்ற நிலையில் தோகைமலையை சேர்ந்த சிறுமியை பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை, இதுக்குறித்து காப்பக கண்காணிப்பாளர் ஆல்பர்ட் மனோகர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.
இதுக்குறித்து போலீசார் விசாரிக்கையில் விடுதியில் உள்ள மாணவிகள் ரொம்ப நாளாகவே சாப்பாடு சரியில்லாமல் அவதிபட்டுக்கொண்டிருந்ததாகவும், மதியம் சமைக்கும் உணவையே இரவு, மறுநாள் காலை வரை பயன்படுத்துவதாகவும், இதனால் உள்ளே உள்ள சிறுமிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரிகிறது. இதனால் சிலர் விடுதியை விட்டு ஓடி போகிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3 சிறுமிகள் தொடர்ந்து தப்பித்துள்ளது. விசாரணையில் தெரிந்துள்ளது. மேலும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய குழந்தைகள் விடுதி அதிகாரிகளான மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி முறையாக விடுதியை ஆய்வு செய்வதில்லை என்றும், குழந்தைகள் நல குழும தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இதனை கண்டும் காணாதவாறு இருந்து பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது மாதிரியான வீட்டை விட்டு வரும் பெண் குழந்தைகளை பாதுக்க வேண்டிய இந்த விடுதிகளில் இப்படி அலட்சியமாகவும், தரமற்ற உணவு கொடுக்காமல் வெளியேறிவதும், பிறகு சில நாட்கள் கழித்து சிக்குவதும், மீண்டும் அதே விடுதியில் சேர்ப்பது என்பது தொடர்ந்து கொண்டிருப்பது குழந்தை உரிமை விசயமாக பார்க்கப்படுகிறது.