Skip to main content

சென்னை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; 5 பேர் ஜாமீன் கோரி மனு!

Published on 01/08/2018 | Edited on 27/08/2018


சென்னை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேர் ஜாமீன் கோரி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக மிரட்டி கூட்டு வன்புணர்வு செய்த 17 பேர் கடந்த 18 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் 17 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கபட்ட நிலையில் அவர்களின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நீட்டித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.
 

 

 

இந்நிலையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முருகேஷ், ஜெய் கணேஷ், சூரியா, ஜெயராமன், ராஜசேகர் ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் சென்னை அயனாவரத்தில் சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்த குடியிருப்பில் உள்ள 22 பேர் ஈடுபட்டதாகவும். அதில் 17 பேர் மட்டுமே கைது செய்யபட்டுள்ளனர்.

ஆனால் தங்களுக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு எதுவும் இல்லை எனவும் தவறாக தங்களை இந்த வழக்கில் கைது செய்யபட்டுள்ளதாகவும் எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் இதற்காக நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த ஜாமீன் மனு விரைவில் மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க படுகின்றது.

 

சார்ந்த செய்திகள்