Published on 12/03/2022 | Edited on 12/03/2022

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3 நாட்களாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளோடு மாநாடு நடைபெற்று வந்தது. இறுதி நாளான இன்று தலைமைச் செயலகத்தில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறை தீர்வு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக 2022ம் ஆண்டிற்கான விருதினை திருச்சி மாவட்ட கலெக்டர் முதலமைச்சர் சிவராசுவிற்கு வழங்கினார். உடன் அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.