Skip to main content

ஆண் குழந்தைக்கு அ.தி.மு.க. நிறுவனர் பெயரை வைத்த முதல்வர் பழனிசாமி..! 

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

Chief Minister Palanisamy  child while mini clinic opening

 

தமிழகத்தில் முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
 


தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, கிராமப்புறம் 1400, சென்னை 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் மினி கிளினிக்குகள் 200 அமைக்கப்படுகின்றன. அதன்படி இன்று சென்னை வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மினி க்ளீனிக்கை முதலவர் எடப்பாடி பழனிசாமி, நேரில்வந்து துவக்கிவைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியின்போது அங்கு கூடியிருந்த அ.தி.மு.க. பெண் தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்லி அத்தொண்டர் கேட்க, அக்குழந்தையை கையில் தூக்கி அக்குழந்தைக்கு 'ராமச்சந்திரன்' என பெயர் வைத்தார். 


 

 

 


 

சார்ந்த செய்திகள்