![chennai vadapalani police filed young woman love issue case](http://image.nakkheeran.in/cdn/farfuture/FyfJYJMG6AKaEcwbntprSGhKynzmymFPQnp8WvlsRRg/1679302441/sites/default/files/inline-images/01%20art%20img%20police%20siren%201_45.jpg)
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளைஞர் ஒருவர் ஏமாற்றியதாக இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவருக்கு அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சுந்தரமூர்த்தி இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். மேலும், அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் சுந்தரமூர்த்தியிடம் இதுகுறித்து தெரிவித்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். அதற்கு சுந்தரமூர்த்தி கருவைக் கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம்பெண்ணின் கருவைக் கலைத்துள்ளார்.
கருவைக் கலைத்த பின்னரும் சுந்தரமூர்த்