சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. பருவமழை பொய்த்து போனதாலும் , ஆழ்துளை கிணறுகள் அதிகம் அமைக்கப்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த கோடைக் காலத்தில் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சென்னை மக்கள் மெட்ரோ நீரையே நம்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வசிப்பவர்கள் ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்தி மெட்ரோ நீரை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மெட்ரோ நீரை பெற விரும்பும் பயனர்கள் இணையதள முகவரி : https://chennaimetrowater.tn.gov.in/ மூலம் மெட்ரோ நீருக்கு விண்ணப்பிக்கலாம். புக் செய்ய விரும்புவோர்கள் முதலில் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு சென்று அதில் 'BOOK A WATER TANKER' என்ற ஆப்சனைத் தேர்வு செய்ய வேண்டும். பின்பு தங்களின் வீட்டு முகவரி , தொலைப்பேசி எண் , நீரின் கொள்ளளவு குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணுக்கு ரகசிய எண் குறித்த ஒரு குறுந்தகவல் வரும். அதனை பதிவிட்டு சமர்ப்பித்தல் மெட்ரோ வாட்டர் புக் செய்யப்பட்டது என்றும், அதற்கான பதிவு எண் தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவலாக வரும்.
இதற்கான மெட்ரோ நீருக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 6000 லிட்டர் மெட்ரோ நீருக்கு விலை ரூபாய் 475 ஆகவும், 9000 லிட்டர் நீருக்கு விலை ரூபாய் 700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என சென்னை பெரு நகர மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒருவர் ஒருமுறை மெட்ரோ நீரை பதிவு செய்து பெற்று இருந்தால், மீண்டும் ஏழு நாட்கள் கழித்து தான் மெட்ரோ நீரைப் பெற முடியும். அதே போல் தொலைப்பேசி வழியாக மெட்ரோ நீரை பெற புக் செய்யலாம். இதற்கான தொலைப்பேசி எண் : 044-45674567 ஆகும். இதன் மூலம் சென்னை மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்குவதை மெட்ரோ நிர்வாகம் உறுதிச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது