




Published on 29/12/2022 | Edited on 29/12/2022
சென்னை பல்லவன் சாலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் 86 மாத பணப் பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காவல் துறையினருக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.