Skip to main content

சென்னையில் வீடு கட்டும் தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
h


சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, தள பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டிட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சென்னையில், சிறப்பு கட்டிடங்கள் எனும் 4 மாடிகளுக்கு மிகாத கட்டிடங்களுக்கு, எஃப்.எஸ்.ஐ. அளவு 1 புள்ளி 5 மடங்காக  இருந்தது.

 

இதனால், ஆயிரம் சதுர அடி நிலத்தில் ஆயிரத்து 500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் மட்டுமே கட்டிடத்தைக் கட்ட முடியும். இந்நிலையில், சென்னை நந்தனத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தள பரப்பளவு குறியீடு 2 மடங்காக மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, எஃப்.எஸ்.ஐ. அளவை 2 மடங்காக அதிகரித்து, தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், ஆயிரம் சதுர அடி நிலத்தில், 2 ஆயிரம் சதுர அடி அளவிலான பரப்பு வரை கட்டிடத்தை கட்டிக் கொள்ள முடியும்.

 

சார்ந்த செய்திகள்