.
ஆந்திர வனப்பகுதியில் இருந்து ஒற்றை சிறுத்தை தமிழக எல்லை மாவட்டமான வேலூர்க்குள் புகுந்துள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பம், அழிஞ்சிகுளம், ஈச்சங்கால், தும்பேரி, அரபாண்டகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சிறுத்தை ஒன்று கடந்த 7 நாட்களாக வழித்தவறி சுற்றித்திரிகிறது. முதலில் கன்று குட்டி, பின்னர் 5 பொதுமக்கள், பின்னர் ஆடுகளை தாக்கிய சிறுத்தையால் இப்பகுதி மக்கள் பயந்துபோய்வுள்ளனர். இந்நிலையில், அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 8-வது நாளாக தேடிவருகின்றனர்.
தற்போது சிறுத்தையை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு வனத்துறை, செல்போன் எண்களை அறிவித்துள்ளது. திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜனிடம் சிறுத்தையை பற்றி தெரிவிக்க 9894020880, வனவர் பரந்தாமனிடம் தெரிவிக்க 8110056512, வனக்காப்பாளர் முனுசாமியிடம் தெரிவிக்க 9047944765, வனக்காவலர் செல்லப்பாவிடம் 9786226657 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்புகொண்டு சிறுத்தையை பற்றி விவரம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் சிறுத்தையை பிடிக்க நாகல் ஏரி பகுதியில் மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.