
விருதுநகரில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண், அவருடைய பெற்றோர், கைதானோரின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுவந்த நிலையில், இந்த வழக்கின் மீதான குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. சிபிசிஐடி போலீசாரால் தயாரிக்கப்பட்டுள்ள 400 பக்க குற்றப்பத்திரிகை ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.