Published on 14/11/2018 | Edited on 14/11/2018

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக மத்திய பல்கலைக்கழகம் சார்பில் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த புயல் எச்சரிக்கையை அடுத்து தேர்வுகளை ஒத்தி வைத்ததாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். நாளை நடைபெற இருந்த பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.