Skip to main content

கலாம் நினைவுநாளைப் புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகள்! -பொன்ராஜ் ஆதங்கம்!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியுமான வெ.பொன்ராஜ், ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாம் அவர்களின் தேசிய நினைவிடத்துக்கு வந்தார். பொதுமக்கள் பலரும் அங்கு கூடியிருந்த நிலையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

 Central and state governments boycotting Kalam anniversary - Bonraj


“இன்று 11-வது இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் 4-வது ஆண்டு நினைவுநாள். இங்கு வந்து பார்த்தேன். ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் மாணவர்களும் அவரை வணங்கி உறுதிமொழி எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இங்கு வரக்கூடிய அரசியல் பிரதிநிதிகளில் யாரும் இன்று வரவில்லை. தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இரண்டுமே அப்துல் கலாமின் நினைவுநாளைப் புறக்கணித்திருக்கிறது. 

 

kalam


இதை நான் மனவருத்தத்தோடு பதிவு செய்கிறேன். கண்டிப்பாக அப்துல்கலாம் அவர்களின் நினைவுநாளை அரசு விழாவாக,  குறைந்தபட்சம் இந்த பேக்கரும்பில் அவர் விதைக்கப்பட்ட இடத்திலாவது,  ஒரு அரசு விழாவாக நடத்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதை ஏற்றுக்கொள்வீர்களோ, புறக்கணிப்பீர்களோ அது உங்கள் இஷ்டம். எனது கோரிக்கையை நான் வைக்கிறேன். அதுமட்டுமல்லாது, இங்கே உச்சிப்புளியில் உள்ள விமானதளத்துக்கு அப்துல் கலாம் அவர்களின் பெயரை வைக்க வேண்டும். மதுரையிலிருந்து ராமேஸ்வரக்கூடிய ரயில் அல்லது சென்னையிலிருந்து வரக்கூடிய ரயிலுக்கு அப்துல்கலாம் பெயரை வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்