Skip to main content

ரேஷன் கடைகளில் சிசிடிவி!!;அரசுக்கு பரிந்துரைக்க உத்தரவு!!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
ration

 

ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்துவது தொடர்பான வழக்கில்  தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்ப கூட்டுறவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ரேஷன் கடையில் பொருட்களை கள்ளத்தனமாக விற்றது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட கீதா என்றவர் அவரது சஸ்பெண்டுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் ரேஷன் கடைகளில் சிசிடிவி காமரா பொருத்துவது தொடர்பான வாதத்தில் கூட்டுறவு சங்க கடைகளில் சிசிடிவி காமரா பொருத்த பெருமளவு நிதி தேவைப்படும் என கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் கூறியிருந்த நிலையில், ரேஷன் கடைகளில் மட்டுமல்ல, ரேஷன் பொருட்களை பாதுகாக்க ரேசன் பொருட்களை கொண்டுவரும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் திட்டம் ஏதும் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

பின்னர் ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்துவது தொடர்பான பரிந்துரையை தமிழக அரசிற்கு அனுப்ப கூட்டுறவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.  

 

 

சார்ந்த செய்திகள்