Skip to main content

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க கோரிய வழக்கு- நீதிபதிகள் சராமாரி கேள்வி

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

 

madurai

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ரங்கராஜன் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம்,பசீர் அகமது அமர்வில் விசாரனை நடைபெற்று வருகிறது இன்றைய விசாரனையில் சிபிஎஸ்இ சார்பாக வழக்கறிஞர் ஆஜராகினர் " இந்த வழக்கு பாதிக்கபட்ட மாணவர்கள் சார்பாக யாரும் வழக்கு தொடர வில்லை பொது நலன் வழக்காக மட்டுமே வழக்கு தொடர பட்டுள்ளது என்றார்.

 

அவர்களிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினார்.

நீங்கள் தவறாக கேள்வி கேட்பீர்கள் பின்னர் அது சரியென்று கூறுவீர்களா..? சிபிஸ்சி சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா..?
தவறான கருத்துகளை சரியாக்க முயற்சிக்க வேண்டாம். இராகத்திற்கு நகம் என்றும், இடைநிலை என்பதற்கு பதிலாக கடைநிலை என்றும்
இரத்த நாளங்கள் என்பதற்கு பதிலாக இரத்தம் நலன் என்றும் தவறு செய்ய பட்டுள்ளது மிகவும் தெளிவாக தெரிகிறது.

 

பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியதை விட தேர்ச்சி பெற்றவர்கள் எப்படி அதிகரிக்கபட்டது. கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாக தரவரிசை பட்டியல் வெளியிட்டது ஏன்..?

 

இவ்வாறு நீங்கள் தவறு செய்தது தெளிவாக தெரிகிறது இது தான் ஜனநாயகமா இல்லை சர்வாதிகாரமா செயல் படுவதா..? தவறான கேள்விகள் இருக்கும் போது எப்படி சரியான பதிலை எதிர்பார்பீர்கள் என்று கேள்விகளை எழுப்பினர்.

இதனால் தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா..? மாணவர்கள் நலன் கருதி சிபிஎஸ்இ செயல்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர்.

 

பின்னர் இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்